You are here:: News Center Press Releases ஊழல் மோசடி, பொருளாதார வீழ்ச்சிக்கு ஜனாதிபதியே பொறுப்புக் கூற வேண்டும் : ரவி கருணாநாயக்க எம்.பி.
 
 

ஊழல் மோசடி, பொருளாதார வீழ்ச்சிக்கு ஜனாதிபதியே பொறுப்புக் கூற வேண்டும் : ரவி கருணாநாயக்க எம்.பி.

AddThis Social Bookmark Button
front view1நாட்டில் காணப்படுகின்ற ஊழல் மோசடிகளுக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்புக் கூற வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.ராஜகிரியவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,அமைச்சர்களும் ஜனாதிபதியுமே நாட்டில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக பகிரங்கமாக கூறுகின்றனர். இந்நிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள அரசு தான் தப்பித்துக் கொள்வதற்காக மக்ககள் மீது சுமைகளை சுமத்துவது முறையானதல்ல.மின் கட்டண உயர்வு மற்றும் ஏனைய பொருட்களின் விலையேற்றத்தின் பின்னணியில் அரசின் ஊழல் மோசடிகளும் களியாட்ட செலவுகளுமே காணப்படுகின்றன.போலியான தேசப்பற்றைக் காட்டி மக்களை ஏமாற்றிய காலம் இனியும் தொடரப்போவதில்லை. இதேவேளை, மக்கள் அரசுக்கெதிராக போராட ஆரம்பித்து விட்டனர் என்றும் அவர் மேலும் கூறினார்.


Fraud, corruption, economic decline President responsibility to say: MP Ravi Karunanayaka

Corruption scandals in the country found to be responsible for the economic downfall of President Mahinda rajapaksave United National Party parliamentarian Ravi Karunanayaka national amaippalarumana said.In Rajagiriya today's press conference on Friday to attend the United National Party said the terivikkaiyileye Panel.This he said,Corruption scandals in the country has been janatipatiyume ministers publicly. The Government admitted the crime is not appropriate to impose burdens on the people to escape.Power tariff hike and other commodity prices in the context of the government's corruption and fraud are Extravagant month.Tecapparrai fake and cheating people no longer longer period. Meanwhile, he said that people have started to fight aracukketir.


http://www.virakesari.lk